சிங்கப்பூரில் PSLE முடிவுகள் நவம்பர் 24ல் வெளியீடு..!! மேல்நிலைப் பள்ளி விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி அறிவிப்பு!

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்கான தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு (PSLE) முடிவுகள் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு (MOE) அறிவித்துள்ளது.
அன்றைய தினம் காலை 11 மணிக்கு மாணவர்கள் தாங்கள் பயின்ற தொடக்கப்பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கு நேரில் வர முடியாத மாணவர்கள், தங்களுக்குப் பதிலாக மற்றொருவரை அனுப்பி மதிப்பெண் பட்டியலைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெற விரும்புவோர் நவம்பர் 26ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
PSLE தேர்வு முடிவுகள் வெளியான அதே நாளில், காலை 11.30 மணி முதல் மாணவர்களுக்கான மேல்நிலைப் பள்ளி (Secondary 1) தேர்வுகளைப் பெற்றோர்கள் இணையம் வழியாகச் சமர்ப்பிக்கலாம்.
இதற்கான கடைசி நாள் நவம்பர் 30ஆம் தேதி மாலை 4.30 மணி ஆகும். இணையவழியில் விண்ணப்பிக்க பெற்றோரிடம் செல்லுபடியாகும் Singpass கணக்கு இருக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் மட்டுமே உள்நுழைந்து விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தால் போதுமானது.
மாணவர்கள் தங்களுக்கான ஆறு பள்ளிகளைத் தேர்வு செய்யும்போது, பள்ளியின் கல்விச் சூழல், சிறப்புத் திட்டங்கள், பாடப்பிரிவுகள் மற்றும் இணைப்பாட நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளின் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் வரம்பைக் காட்டிலும் தளர்வான வரம்பைக் கொண்ட இரண்டு முதல் மூன்று பள்ளிகளையாவது தங்களது ஆறு தேர்வுகளில் சேர்த்துக்கொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் எந்த மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற Secondary 1 பள்ளி ஒதுக்கீட்டு முடிவுகள் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவுகளை இணையவழி S1 Portal, குறுஞ்செய்தி (SMS) அல்லது மாணவர்கள் பயின்ற தொடக்கப்பள்ளி வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கிடையில், நடைமுறைப் பயிற்சி மற்றும் செய்முறை சார்ந்த கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு Crest Secondary School மற்றும் Spectra Secondary School ஆகியவை மாற்றுக் கல்வி வாய்ப்புகளை வழங்குகின்றன.
Posting Group 1 அல்லது Posting Group 1/2 பிரிவுக்குத் தகுதி பெற்ற மாணவர்கள் இந்தப் பள்ளிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
எனவே, தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கான காலக்கெடுவைக் கவனத்தில் கொண்டு, பெற்றோர்களும் மாணவர்களும் உரிய நேரத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow us on :
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
