குடியிருப்பாளர்களுக்கு நிம்மதி.!!!புதிய வெப்ப-இன்சுலேடிங் திட்டம்..!!

குடியிருப்பாளர்களுக்கு நிம்மதி.!!!புதிய வெப்ப-இன்சுலேடிங் திட்டம்..!!

சிங்கப்பூர்:செம்பவாங் பகுதியில் உள்ள 46 HDB அடுக்குமாடி குடியிருப்புகளில்  வெப்ப-இன்சுலேடிங் “கூல்-டு-டச்” பூச்சு பூசப்பட்டுள்ளது.இந்த புதிய பூச்சு கட்டிடச் சுவர்களின் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க உதவுகிறது. 

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ ஒன்றை செம்பவாங் GRC நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான ஓங் யே குங்,சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். 

பூச்சு செய்யப்பட்ட பிறகு, சுவர்கள் அதிகமாக சூடாகாமல் குளிர்ச்சியாக இருப்பதாகவும், தொடுவதற்கு வசதியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சாதாரண வண்ணப்பூச்சுகள் வெப்பத்தை உறிஞ்சும் நிலையில், இந்த புதிய பூச்சு வெப்பத்தை பிரதிபலிப்பதால் கட்டிடத்தின் மொத்த வெப்பநிலை குறைகிறது என்று நகர சபை அதிகாரிகள் விளக்கினர்.

இது ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் நகர சபை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாகும் என்றும், எதிர்வரும் காலங்களில் செம்பவாங் பகுதியில் உள்ள அனைத்து HDB தொகுதிகளிலும் இந்த பூச்சு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg