OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

OpenClaw தளத்தை பயன்படுத்த கட்டுப்பாடு..!! IMDA எச்சரிக்கை..!!

சிங்கப்பூர்: OpenClaw போன்ற செயற்கை நுண்ணறிவு முகவர் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) இன்று (மே 14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது போன்ற தளங்களை சமீப காலமாக தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கிடையே பிரபலமாகி வருகிறது. OpenClaw-ல் உள்ள வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தரவு மீறல்கள் போன்ற பாதுகாப்பு அபாயங்கள் அந்த தளத்தில் அதிகம் உள்ளன.

பயனர்கள் இதைப் பயன்படுத்தும்போதும், நிறுவும்போதும், அமைக்கும்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் IMDA குறிப்பிட்டுள்ளது.

OpenClaw பயன்படுத்த எளிதாக இருப்பதால் இந்த தளம் பிரபலமாக உள்ளது. அதனால் இது உள்ளூர் கோப்புகள் மற்றும் கணினி அமைப்புகள் உடன் இணைந்து, Whatsapp மற்றும் Telegram போன்ற தகவல் தொடர்பு தளங்களில் வாடிக்கையாளர் விசாரணைகளுக்கு தானாகவே உதவியாளராக பதிலளிக்கும்.

மேலும் அறிக்கைகள், மின்னஞ்சல்கள் மற்றும் அட்டவணைகள் எழுதுவதற்காக பல இணையதளங்களில் இருந்து தரவுகளை ஒன்றிணைத்து வழங்கும்.

இந்த தளம் இயல்பாகவே பயணம் அனுமதிகளைப் பயன்படுத்துவதால் கணினியில் உள்ள கோப்புகள், API விசைகள், OAuth டோக்கன்கள் மற்றும் அமர்வு தரவுகளைப் படிக்கும் அபாயம் உள்ளது என IMDA எச்சரித்துள்ளது.

தரவுக் கசிவு அல்லது கணினி சீர்குலைவு ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக பயனர்கள் இந்த தளத்தை தனிப்பட்ட கணினிகளிலோ அல்லது முக்கியமான தரவுகளைக் கொண்ட அலுவலக சாதனங்களிலோ நிறுவ வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக அதற்கென ஒதுக்கப்பட்ட சாதனங்களிலோ அல்லது பிரிக்கப்பட்ட கிளவுட் சூழலை பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முகவர் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போது மனிதர்கள் மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒப்புதல் வழிமுறைகள் அறிவுறுத்தல்களை மட்டுமே சார்ந்து இருப்பதை தவிர்த்து முடிந்தவரை கணினி அனுமதிகள் மற்றும் பணிப்பாய்வுகள் மூலமாகவே இவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK