சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் சாலையில் கலவரம்..!! காவல்துறை விசாரணை..!!
சிங்கப்பூரில் மே 14ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சாலை மற்றும் சோமர்செட் பகுதியில் பல காவல்துறை வாகனங்களும் கலவரத் தடுப்பு வாகனங்களும் காணப்பட்டன. இந்த கலவரத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் காவல்துறை விசாரணைக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த காணொளி ஆனது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆர்ச்சர்ட் கேட்வே அருகே பல காவல்துறை வாகனங்களும் கலவர தடுப்பு வாகனங்களும் நின்று கொண்டிருப்பது தெரிகிறது.
சனிக்கிழமை (மே 16) மாலை 6:45 மணி அளவில் 227, ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஆர்ச்சர்ட் கேட்வேயில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
அதனால் காவல்துறையும் கலவரத் தடுப்பு வாகனங்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டன என்பதையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
வேண்டுமென்றே துன்புறுத்தியது மற்றும் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியது போன்ற சந்தேகத்தின் பெயரில் 14 வயது சிறுவன் ஒருவன் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் காவல்துறை கூறியுள்ளது. கலவரம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.