சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் ரோபோ போலீஸ் அறிமுகம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் “GIBSON” எனப்படும் புதிய ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ சுய இயக்கத்தில் சுற்றுப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதுடன், போலீசாரை ride-hailing முறையில் தேவையான இடங்களுக்கு அழைத்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது.

HTX மற்றும் A*STAR நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்த இந்த ரோபோAutonomous Patrol மற்றும் Ride-Hailing என இரண்டு முக்கிய செயல்பாடுகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பான முறையில் நடமாடுவதற்கான உணர்கருவி, கருவியில் கேமராக்கள், முப்பரிமான ஒளி உணர்வு போன்ற வசதியும் இதில் உள்ளது.

தற்போது Terminal 4 பகுதியில் சோதனைமாக இயக்கப்படுகின்ற இந்த ரோபோ, சிங்கப்பூர் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கி இருக்கிறது.

சிங்கப்பூரில் இனி எதிர்காலத்தில் இதுபோன்ற ரோபோக்கள் காவல் துறையின் முக்கிய அங்கமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan