அடடா..!! சிங்கப்பூர்ல இப்படி ஒரு திட்டமா? எதற்காக?

அடடா..!! சிங்கப்பூர்ல இப்படி ஒரு திட்டமா? எதற்காக?

சிங்கப்பூரில் எவ்வளவு அதிகமாக மழை பெய்தாலும் வெள்ளம் ஏன் வந்ததில்லை?
ஒரு ஆண்டிற்கு சராசரியாக 2,400 மில்லி மீட்டர் மழை பொழியும்போது சிங்கப்பூரில் ஏற்படுத்தியுள்ள ஒரு அமைப்பின் மூலமாக இன்று வரை சிங்கப்பூரில் வெள்ளம் ஏற்படவில்லை.

என்ன காரணம்?
📌சிங்கப்பூரில் ஏற்படுத்தியுள்ள உறுதியான வடிகால் அமைப்பு


📌 இது உலகிலேயே மிகவும் உறுதியான வடிகால் அமைப்பாகும்.

📌 60 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி சுரங்க வடிகள் கட்டமைப்பால் பூமிக்கு அடியில் ஒரு பிரம்மாண்டமான நீர் மேலாண்மை (Water Management) அமைப்பை உருவாக்கியுள்ளது.

📌 இந்த வடிகால் அமைப்பின் அளவானது 8,000 கி.மீ வரை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆசியாவில் உள்ள பல நகரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மொத்த நீர் பிடிப்பு பாதைகளை விடவும் சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பொது வடிகால் அமைப்பானது அதிக திறன் மிக்கவை ஆகும்.

சிங்கப்பூர் இந்த வடிகால் அமைப்பிற்கு எவ்வளவு முதலீடு செய்துள்ளது?
வெள்ளத் தடுப்பிற்காக சிங்கப்பூர் $1.3 பில்லியன் முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீடு தொகையானது பல நாடுகளுக்கு ஒரு கனவு தொகையாகவே இருக்கிறது.

இந்த வடிகால் அமைப்பின் மூலமாகத்தான் சிங்கப்பூரில் இதுவரை வெள்ளம் வர அனுமதிப்பதே இல்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK