சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூரில் இணையத்தில் போலி பொருட்கள் விற்பனை..!! 2 பெண்கள் கைது..!!

சிங்கப்பூர் : இணையத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 பெண்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண்கள் 30 மற்றும் 47 வயதுடையவர்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி மற்றும் மே 19 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சம்பவம் ஆனது நிகழ்ந்துள்ளது.

ஈசூன் ரிங் ரோடு, கம்பாஸ் கிரசன்ட், புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவன்யூ 4, புக்கிட் பாத்தோக் கிரசன்ட் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் காவல்துறையினர் கிட்டத்தட்ட 400 போலியானப் பொருட்களை கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மே 21 ஆம் தேதியன்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சொகுசு கைப்பைகள் பணப்பைகள் கைக்கடிகாரங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருள்களின் மதிப்பு $14,800-க்கும் அதிகமானது என குறிப்பிடப்பட்டிருந்தது.

நாங்கள் அறிவு சார் சொத்துரிமை மீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம்; இணையதளங்கள் வழியாக போலியானப் பொருட்களை விநியோகிப்பது கடுமையான குற்றங்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

கைது செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வர்த்தக நோக்கத்திற்காக போலியான வர்த்தக முத்திரைகளைக் கொண்ட பொருட்களை வைத்திருக்கும் குற்றம் அந்த பெண்கள் மீது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு $100,000 வரை அபராதம்,5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் வழங்க வாய்ப்புள்ளது.

இதுபோன்று முன்பு போல சொகுசு பொருட்களைத் தொடர்ச்சியாக விற்பனை செய்த குற்றத்திற்காக சிங்கப்பூரைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் விற்பனையாளர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த நபர், பிரெஞ்சு சொகுசு தயாரிப்பு நிறுவனமானான லுயி விட்டோனுக்கு $510,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK