பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$1.6 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர்.
காவல் துறை இன்று (02.11.25) வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை மற்றும் மின் வணிக மோசடிகள், முதலீட்டு ஏமாற்றங்கள், போலி டெபாசிட் திட்டங்கள், பண பரிமாற்ற மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த மோசடிகளால் மொத்தம் S$1.6 மில்லியனுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. விசாரணையின் போது, சந்தேக நபர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் SingPass தகவல்களை குற்றவியல் கும்பல்களுக்கு ஒப்படைத்ததாக அல்லது விற்றதாக தெரியவந்துள்ளது.
சிலர் மோசடியாக வங்கிக் கணக்குகளைத் திறந்து,அதன் உள்நுழைவு தகவலை அடையாளம் தெரியாத நபர்களுக்கு வழங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பல வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க குற்றவியல் குழுவிற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
17 பேர்மீது ஏமாற்றுவதற்குத் தூண்டுதல், சட்டவிரோத பண பரிமாற்றம், அனுமதியில்லாத கணினித் தரவு அணுகல் மற்றும் கடவுச்சொல் வெளிப்படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
மேலும், மோசடி செய்யப்பட்ட நிதி மேலும் மாற்றப்படுவதைத் தடுக்க, சந்தேக நபர்களின் டிஜிட்டல் வங்கி சேவைகள், வங்கி அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் ATM அணுகலை போலீசார் தடை செய்துள்ளனர்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
