மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!!
1957ஆம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் உயிர்களையோ பொருட்களையோ சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான பட்டாசுகளை தயாரிப்பதும் வைத்திருப்பதும் குற்றமாகும் என்பதை நினைவுப்படுத்தி மலேசிய காவல்துறை தலைவர் இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் அறிக்கையின் படி, அங்கீகரிக்கப்பட்ட 45 வகை பட்டாசுகள் மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாப் ஆப் மற்றும் ஹேப்பி பூம் என்ற வெடி வகைகளும் உள்ளடங்கும்.
ஆனால் இந்த வெடிகளை விற்பதற்கு உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் அனுமதி வேண்டும் என திரு காலிட் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இந்த சீன புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார். மேலும் பட்டாசுகள் மற்றும் வானவெடிகள் வெடிப்பதற்கு உண்டான விதிமுறை சட்டத்தை மீறுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.