சிங்கப்பூரில் Shariot கார் பகிர்வு சேவை தற்காலிக நிறுத்தம்..!!!

சிங்கப்பூரில் Shariot கார் பகிர்வு சேவை தற்காலிக நிறுத்தம்..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செயல்பட்டு வந்த Shariot கார் பகிர்வுச் சேவை நிறுவனம், தனது வாடகைச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வர்த்தகத்தை மறுசீரமைத்து, சேவையை முழுமையாக மறுஆய்வு செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்தக் கட்ட வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், சேவை தொடர்பான வேறு மாற்றங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படும் என்றும் Shariot தனது Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த திடீர் அறிவிப்பால் பல வாடிக்கையாளர்கள் குழப்பம் மற்றும் அதிர்ச்சியில் உள்ளனர். சிலர் முன்பதிவுக்காக செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், முன்பதிவு செய்த சிலரின் தனிப்பட்ட பொருட்கள் இன்னும் வாகனங்களுக்குள் இருப்பதாகவும், அதுகுறித்த கவலைகளையும் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.Shariot நிறுவனம், Autobahn Rent A Car உள்ளிட்ட பல வாகன சேவை நிறுவனங்களை இயக்கும் ஒரு குழுமத்தின் பகுதியாகும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK