அதிர்ச்சி…!!! சத்தம் இல்லாமல் இரு இளைஞர்கள் செய்த வேலை…!!!

அதிர்ச்சி...!!! சத்தம் இல்லாமல் இரு இளைஞர்கள் செய்த வேலை...!!!

சிங்கப்பூர்:அங் மோ கியோ அவென்யூ 8, பிளாக் 510 இல் நேற்று (25.09.25) இரவு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிவில் பாதுகாப்புப் படைக்கு இரவு 8.30 மணியளவில் அழைப்பு வந்ததையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 11 குடியிருப்பாளர்கள், 18 மாதங்கள் முதல் 85 வயது வரையிலானவர்கள். அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

போலீசார் கூறியதாவது, 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள், குறும்புக்காக தீ வைத்ததாக சந்தேகிக்கப்படுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்துக்குப் பிறகு புகை மற்றும் வெடிப்புச் சத்தம் கேட்கப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

ஆங் மோ கியோ குழுமத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடியா ஏ. சாம்டின், சமூக ஊடகத்தில் பதிவிட்டதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய குடியிருப்பாளர்கள் மற்றும் சமூக கிளப் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நகர சபை குழு உடனடியாக மின்சார விநியோகத்தை சரிசெய்து, சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கியதாகவும் குறிப்பிட்டார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK