குற்ற செயல்களுக்காக போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளைப் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மோசடி தடுப்பு பிரிவு மற்றும் 7 காவல் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த மாதம் (ஏப்ரல்) 20-ஆம் தேதி முதல் இந்த மாதம் (மே) 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் லாபத்திற்காக பதிவு செய்யப்பட்ட போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
பல்வேறு சில்லறை வியாபாரிகளிடமிருந்து சிம்கார்டுகளை மொத்தமாக பதிவு செய்து, பின்னர் 30 வயது முதல் 64 வயதுடையவர்களிடம் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை குற்ற கும்பல்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசடி, கள்ள கடன் வாங்குதல் மற்றும் பாலியல் தொழில் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்காக குற்றவாளிகள் உள்ளூர் சிம்காடுகளைத் தகவல் தொடர்பு சாதனங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்ற செயலுக்கு உதவும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டை மற்றொரு நபருக்கு தெரிந்தே வழங்கும் நபருக்கு $10,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.