சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!!

சிங்கப்பூர் Culture Pass திட்டம்..!! புதிய புத்தகக் கடைகள் சேர்ப்பு..!!

சிங்கப்பூர்: கலாச்சாரம் சமூக மற்றும் இளைஞர் அமைச்சகம்(MCCY) கலாச்சார அட்டைத் (Culture Pass) திட்டத்தின் வரம்பை விரிவுப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் கூடுதலாக 6 புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களது கலாச்சார அட்டைகளைப் பயன்படுத்தி இந்த புத்தக கடையில் உள்ளூர் இலக்கிய புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

9 புத்தகக் கடைகளின் 40 கிளைகள் இத்திட்டத்தில் பங்கேற்று முன்னதாக பங்கேற்று ஆரம்பத்தில் 1500 புத்தகங்களை அவை உள்ளடக்கியிருந்தன.

இந்த புதிய திட்டத்தில் புதிதாக இணையும் 6 புத்தகக் கடைகள் பின்வருமாறு:
👉பஷீர் கிராபிக் புக்ஸ்
👉புக் பாயிண்ட்
👉லிட்டர்ட் வித் புக்ஸ்
👉நூருல் அன்வர் புக்ஸ்டோர்
👉டிசிஇசட் ஸ்டுடியோ
👉ஜுவர் புக் ஸ்டோர்

MCCY வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூரார்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள 15 புத்தகக் கடைகளில் 46 கிளைகளில் 2600க்கும் மேற்பட்ட தகுதிப் பெரறும் உள்ளூர் இலக்கியப் படைப்புகளில் இருந்து தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்க முடியும் என்று கூறியுள்ளது.

இந்த ஆண்டு (2026) மார்ச் 1 ஆம் தேதி முதல் உள்ளூர் இலக்கியப் படைப்புகள் கலாச்சார அட்டை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வசிப்பாளர்களால் ஆங்கிலம், சீனம், மலாய் அல்லது தமிழ் மொழிகளில் எழுதப்பட்டவை ஆகும்.

நாவல்கள் கவிதை தொகுப்புகள் நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் உள்ளிட்ட பல வகையான புத்தகங்களை இவை உள்ளடக்கியுள்ளன. கலாச்சார அட்டையுடன் வாங்குவதற்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களின் அட்டைகளிலும் கலாச்சார அட்டையின் சின்னம் இடம்பெற்றிருக்கும்.

இந்த வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளூரில் ம தற்காலிக நிகழ்வுகள் புத்தக கண்காட்சிகள் மற்றும் இலக்கிய விழாக்கள் நடத்தப்பட உள்ளது.

இதன் மூலம் அதிகமான உள்ளூர் மக்கள் இலக்கியங்களைப் பெறவும், தங்களின் கலாச்சார அட்டையைப் பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவற்றை வாங்கவும் முடியும். பங்கேற்கும் அனைத்து புத்தகக் கடைகளையும் பொதுமக்கள் கீழ்காணும் இணையதளம் மூலம் பார்வையிடலாம் -https://www.sgculturepass.gov.sg/

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK