சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! கோட்டா அதிகரிக்குமா?

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம்!! கோட்டா அதிகரிக்குமா?

சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் முடிந்துள்ளது. இதனால் கோட்டா அதிகரிக்குமா? அதிக வேலை வாய்ப்புகள் வருமா? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.

தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஆட்களை எடுப்பது மிகவும் குறைவாக உள்ளது.டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போட்டு காத்திருப்பவர்களை டெஸ்ட் அடிக்க வைக்கிறார்கள்.தற்போது டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்பும் குறைவு. S PASS,E PASS,NTS பெர்மிட் ஆகிய பாஸ்களில் வேலை வாய்ப்புகள் வருகிறது.ஆனால் அதிலும் சில ரூல்ஸ் வுடன் வருகிறது. ஓர் உதாரணமாக வயது வரம்பு குறிப்பிட்டு கூறுவது,குறிப்பிட்ட யூனிவர்சிட்டியில் படித்திருக்க வேண்டும்,என வேலை வாய்ப்புகளில் இருக்கிறது.இவை அனைத்தும் சரியாக இருந்து அப்ளை செய்தாலும் அனைவருக்கும் approved ஆகிறதா என்பது கேள்விக்குறியே.ரிஜெக்ட் ஆனதுக்கான காரணம் கம்பெனிக்கு மட்டுமே தெரியும்.S PASS,E PASS,NTS பெர்மிட் ஆகிய ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்தாலும் approved ஒப்பிடும் போது rejection அதிகமாக இருக்கிறது.

PCM,Shipyard பெர்மிட்டில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லலாம்.ஆனால் சம்பளம் குறைவாக இருக்கும்.நீங்கள் செல்வதற்கான கட்டணம் குறைவு.ஆனால் வேலை கடினமாக இருக்கும்.

S PASS,E PASS,NTS PERMIT இல் நீங்கள் முயற்சி செய்தால் அதற்கு அட்வான்ஸ் கேட்கிறார்கள். நீங்கள் ஏஜென்ட்டிடம் பணம் செலுத்துவதற்கு முன் மொத்தப் பணம் எவ்வளவு,கட்டிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்து விடுவீர்களா,ரிஜெக்ட் ஆகிவிட்டால் எவ்வளவு தொகையை திருப்பி கொடுப்பீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

PSA இல் வேலை வாய்ப்புகள் வரும்.அதற்கும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

TEP PASS இல் செல்லலாம் . ஆனால் 3முதல் 4 மாதங்கள் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க முடியும்.நீங்கள் tep pass இல் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை நீங்கள் கட்டிய பணத்தை இரண்டு மாதங்களில் எடுத்து விட வேண்டும்.அடுத்த மாதங்களில் வரும் சம்பளம் லாபமாக இருக்க வேண்டும்.