சுகாதாரத்தை காக்கும் சிங்கப்பூர்..!!! நைட் கிளப்புகளில் இ-சிகரெட்டுக்கு கடும் தடை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதை வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில்,சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மற்றும் சிங்கப்பூர் இரவு வாழ்க்கை வணிக சங்கம் இணைந்து புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், இரவு விடுதிகளின் நுழைவாயில் மற்றும் உள்ளகங்களில் “இ-சிகரெட் பயன்படுத்த வேண்டாம்” என்ற பலகைகள் வைக்கப்படுகின்றன.கூடுதலாக, HSA-வின் ஆன்லைன் புகாரளிப்பு அமைப்புடன் இணைக்கும் QR குறியீடுகள் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களும் ஊழியர்களும் சட்டவிரோத செயல்களை நேரடியாக புகாரளிக்க முடியும்.
இ-சிகரெட்டை எடுத்துச் செல்லும் அல்லது பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நுழைவை மறுக்கும் அதிகாரமும் இரவு விடுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் இணைப் பேராசிரியர் சுவா ஸ்வீ பூன் கூறியதாவது: “இரவு விடுதி இடங்களில் இ-சிகரெட்டுகள் அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து இரவு விடுதிகளும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். இது சட்டவிரோத இ-சிகரெட் பயன்பாட்டை தடுக்க உதவும் என்று கூறியுள்ளார்.
“வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவோம்.வசதியான புகாரளிப்பு சேனல் வாடிக்கையாளர்களின் நலனையும் பாதுகாக்கும்” என்று சிங்கப்பூரின் இரவு விடுதி சங்கத் தலைவர் லாங் தியான்ஹாங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், சிங்கப்பூரின் அனைத்து நைட் கிளப்புகளிலும் இ-சிகரெட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.