சிங்கப்பூர் பொது மருத்துவமனைகள் : நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் குறைப்பு..!!
சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நேரடியாக வரும் நோயாளிகளுக்கான காத்திருப்பு நேரம் 2023 ஆம் ஆண்டு 17 நிமிடங்களாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2025) அது 8 நிமிடங்களாக குறைந்துள்ளது.
மேலும் 95 % நோயாளிகள் 72 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த காத்திருப்பு நேர மேம்பாடானது 2023 ஆம் ஆண்டு இருந்த 164 நிமிடங்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிறந்த முன்னேற்றமாக கூறப்படுகிறது.
சுகாதார மற்றும் மனிதவளத் துறைக்கான மூத்த இணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் அவர்களிடம் செம்பாவாங் GRC நாடாளுமன்ற உறுப்பினர் விகாயின் சில கேள்விகளை எழுப்பி உள்ளார். அதற்கான பதில்களை இன்று (மே 7) நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சகம் (MOH) நோயாளிகளின் காத்திருப்பு நேரங்களை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச நேரங்களின்படி கணக்கிடுவதில்லை எனவும் ஆனால் 72 நிமிடங்களுக்கு மேலான காத்திருப்பு நேரம் ஆனது அதிகபட்ச நேரங்களில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
முன்கூட்டியே சந்திப்பு நேரப் பதிவு செய்யப்பட்டிருந்தால் கடந்த ஆண்டு (2025) காத்திருப்ப நேரம் சுமார் 10 நிமிடங்களாக இருந்துள்ளது. அதனால் 95 % நோயாளிகள் 52 நிமிடங்களுக்கு மேல் அதனால் காத்திருக்கவில்லை.
பொது மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் அங்குள்ள நிலவரத்தை கணிப்பது என்பது மிகவும் கடினமானது என்று ஹ்சு பாவோ கூறியுள்ளார். சில நோயாளிகளின் நிலைமை மிகவும் மோசமானதாக இருப்பதால் மருத்துவரை சந்திக்க அதிக நேரம் கூட எடுத்துக் கொள்ளலாம். இது மற்ற நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தையும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
அதனால் முடிந்தவரை சந்திப்பு முன்பதிவு முறையை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானவும் இது நோயாளிகளின் கொள்ளளவை மேம்படுத்தவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. அவசர தேவைகளுக்காக முன்பதிவு செய்யாமல் நேரடியாக வரும் நோயாளிகளுக்கு இடமளிக்கும் வகையில் வழக்கமாக மருத்துவமனையின் உண்மையான கொள்ளளவை விட குறைவான சந்திப்புகளையேத் திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் பணியில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.