சிங்கப்பூர் போக்குவரத்து அப்டேட்: ERP-2 அறிமுகம்..!! LTA அறிவிப்பு..!!
சிங்கப்பூரின் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை (ERP2) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.
இதனால் பெரும்பாலான கேமராக்களில் ஒளிபரப்பப்படும் சாலை நிலவரங்கள் பற்றிய நேரடி காட்சிகள் வரும் ஜூன் 30-ம் தேதி உங்களால் நிறுத்தப்பட உள்ளது. மேலும் சில அறிவிப்புப் பலகைகளும் படிப்படியாக அகற்றப்பட உள்ளது.
இதற்கு பதிலாக சாலை நிலவரம் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அடுத்த தலைமுறை மின்னியல் சாலை கட்டண முறை (ERP-2) வழியாக வாகன உள் சாதனங்களில் (ஓபியு) தெரிவிக்கப்படும்.
இந்த சாதனங்களை அடுத்த ஆண்டு(2027) ஜனவரி 1ஆம் தேதிக்குள் அனைத்து வாகனங்களிலும் பொருத்த வேண்டும் என்று LTA வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே 1ஆம் தேதி அன்று ஒன் மோட்டார் இணையதளத்தில் நேரடி காட்சிகள் நிறுத்தப் போவதை பற்றி போக்குவரத்து ஆணையம் முன்பே அறிக்கையை வெளியிட்டு இருந்தது.
ERP-க்கு மாறுவதால் இனி முக்கிய போக்குவரத்து நிலவரங்களை வாகனத்தில் உள்ள ஓபியூ வழியாக ஆணையம் தெரிவிக்கும் என்று LTA கூறியுள்ளது. பொதுமக்கள் இந்த புதிய மாற்றத்திற்கு ஏற்ப சரி செய்து கொள்வதற்காக சாலை நிலவரக் காட்சிகள் நிறுத்தப்படுவதை முன்னதாகவே அறிவித்துள்ளோம் என்றும் LTA தெரிவித்துள்ளது.