விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!!

விதிகளை மீறியதால் கைதான சிங்கப்பூர் நபர்..!!

இலங்கையை வம்சா வழியாக கொண்ட 49 வயதை சேர்ந்த சிங்கப்பூரர் திருநீபனர் என்ற ஆடவர் சுற்றுலா பயணிகளாக கேரளாவிற்கு சென்று உள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை (டிசம்பர் 20) காலை 9:25 மணியளவில் கேரளாவில் உள்ள ஒரு இந்து கோவிலான ஸ்ரீ பத்மநாப சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.

இந்த கோவிலுக்குள் புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்க தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் கோவிலுக்குள் அனைத்து மின் சாதனங்கள் கொண்டு செல்லவும் தடை விதைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறிய இந்த ஆடவர் கேமரா பொருத்தப்பட்ட கண்ணாடியை அணிந்து இரந்ததை கோயில் பாதுகாப்பு ஊழியர் மூலமாக தெரிய வந்ததை அடுத்து அவரை உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்த ஆடவர் கோவிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடிகளை பயன்படுத்தி அவர் காணொளி எடுத்த விதிமீறல் குற்றத்திற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது கைது செய்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK