சிங்கப்பூர் மக்களே..!! தென் கொரியா போறீங்களா..?? சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட பதிவு..!!!
சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்ட முக்கிய பதிவு: தென் கொரியாவிற்குள் நுழைய உள்ள சிங்கப்பூர் மக்களே, தென் கொரியாவிற்குள் நுழைய 17 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூர் மக்களுக்கு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தானியக்க குடிநுழைவு முறையை பயன்படுத்துவதற்கு புதிய நடைமுறையை சிங்கப்பூர் தூதரகம் டிசம்பர் 23, 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று சமூக வலைத்தளமான பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது.
இஞ்சியோன் அனைத்து உலக விமான நிலையத்திற்கு சென்று இறங்கியவுடன் சிங்கப்பூர் பயணிகள் இந்த தானியக்க குடிநுழைவு நடைமுறையின் ஒருமுறை பதிவு செய்திருக்க வேண்டும்.
அடுத்தடுத்த முறையில் தென் கொரியாவிற்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் அங்கே இருக்கக்கூடிய எந்த ஒரு விமான நிலையத்திலும் தானியக்க குடிநுழைவு வாயில்களை பதிவு செய்துள்ளதால் பயன்படுத்த முடியும்.
பயணிகள் வைத்திருக்கும் தற்போதைய கடப்பிதழ் காலம் முடியும் வரை இந்த பதிவானது செல்லுபடியாகும் என்பதை அறிவித்துள்ளது.
தானியக்க நடைமுறை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக குடி நுழைவு நடைமுறைகளை நிறைவேற்றுவதற்காக சிங்கப்பூரர்கள் ஏற்கனவே வரிசைகளில் நிற்க வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் தற்போது கொண்டுவரப்பட்ட நடைமுறையால் சிங்கப்பூரர்கள் வரிசைகளில் நிற்கத் தேவையில்லை.
சிங்கப்பூரர்கள் செல்ல விரும்பும் நாடுகளில் தென் கொரியா, பிரபலமான நாடாக உள்ளது. தென் கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின் படி 2024 இல் ஏறக்குறைய 3,80,000 சிங்கப்பூர் மக்கள் அங்கு சென்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தானியக்க முறையால் பயனடைபவர்கள் மேலும் சிலர். ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான், தைவான், பிரிட்டன் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர்.