சிங்கப்பூரின் 60வது ஆண்டு கொண்டாட்டம்...!!! 95 வயது மூத்த வீரருக்கு பெருமைமிகு அழைப்பு...!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் தனது 60வது ஆண்டு தேசிய தினத்தை கொண்டாடும் நிகழ்வில், 95 வயதான முன்னாள் சார்ஜென்ட் வெய் ஷாவோஜி உட்பட பல முன்னாள் படைவீரர்களும் பணியாளர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.
1930-ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்த வெய், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்டு ஓட்டுநராக பணியாற்றினார்.
1948-ல் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்ந்த அவர், பின்னர் டிராம் ஓட்டுநர், துணை தீயணைப்புப் படை வீரர் மற்றும் கடற்படை தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி, மொத்தம் 40 ஆண்டுகளுக்கும் மேலான சேவையைச் செய்தார்.
மரியா கலவரம் (1964) மற்றும் இந்தோனேசிய-மலேசிய மோதல் (1963–1966) உட்பட பல முக்கிய பணிகளில் பங்கேற்றார். 1976-ல் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ்ந்த அவர், இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் மூத்த வீரராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் வளர்ச்சி பயணத்தை நேரில் கண்டவர் என்ற நிலையில், அடுத்த 60 ஆண்டுகளிலும் நாடு மேலும் வளம் பெறும் என நம்புவதாகக் கூறினார்.