சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..??

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..??

சிங்கப்பூர் ஆயுதப்படை தினக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் தொழிலாளர் கட்சியின் (Worker’s Party) துணை பொதுச் செயலாளர் 49 வயது ஃபூ சீ குவான் ஆண்டின் சிறந்த தேசிய சேவை வீரர் என்ற விருதை வென்றுள்ளார்.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார்.

ஃபூ சீ குவான் அவர்கள் ROVERS (Reservist on Voluntary Extended Reserve Service) திட்டத்தின் கீழ் சேவையாற்றி வருகிறார். இந்த திட்டம் சிங்கப்பூரார் தங்களது கட்டாய தேசிய சேவை காலத்திற்கு அப்பாலும் தங்களின் சொந்த விருப்பத்தின் பெயரில் நாட்டின் பாதுகாப்பிற்காக சேவை நீட்டிக்க வழிவகை செய்கிறது.

இவர் 2026ல் தொழிலாளர்கள் கட்சியில் இணைந்துள்ளார். 2020 பொதுத்தேர்தலில் ஈஸ்ட் கோஸ்ட் GRC தொகுதியிலும், 2025 பொதுத் தேர்தலில் டாம்பின்ஸ் சாங்காட் தொகுதியிலும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் (MINDEF) தகவல்படி, நாட்டின் பாதுகாப்பு பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 தேசிய வீரர்களில் இவரும் ஒருவர் ஆவர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK