சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது?

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது?

சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று (ஜூலை 2) அதிகாலை ஒரு கொடூரமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 நபர்கள் மற்றொரு நபரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

அதனால் அந்த நபருக்கு கழுத்து உட்பட சில இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 3) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

33 வயதான லி ஜிஜி ஜேசன், 27 வயதான கோ ஜுன் சியோங் கிளாப்டன் மற்றும் 25 வயதான ஃபித்ரி பின் கஸ்தூரி ஆகியோர், ஜூலை 2- ஆம் தேதி அன்று அதிகாலை 2:55 மணியளவில் புயோங் சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலை சந்திப்பில், காங் கார் கீட் என்பவரை கத்தியால் கழுத்திலும் தலையிலும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

வேண்டுமென்றே அபாயகரமான ஆயுதத்தால் ஒருவருக்கு தீங்கு விளைவித்த குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் அவர்களுக்கு ஜாமீன் எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த வழக்கு ஜூலை 17ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வருமென்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 38 வயதுடைய 4 நபர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அபராதம், பிரம்படி அல்லது இந்த தண்டனைகளில் ஏதேனும் ஒன்று சேர்த்து வழங்கப்படலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK