மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..??

மிஸ்ட்ரல் Al-யுடன் இணையும் Singtel நிறுவனம்..!! எதற்காக..??

சிங்க்டெல் டிஜிட்டல் இன்ஃப்ராகோவின் Al Cloud சேவையான RE:Al மிஸ்ட்ரல் Al நிறுவனத்துடன் இணைய உள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் Al தீர்வுகளை உருவாக்குவதிலும், முக்கியத் துறைகளில் Al பயன்பாட்டை விரைப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு மையத்தை நிறுவுவதிலும் இணைந்து செயல்பட உள்ளது.

பல்வேறு தொழில்துறைகளில் திறன்களை மேம்படுத்துவதற்காக சிங்க்டெல் நிறுவனம் பிரெஞ்சு தொழில்நுட்ப நிறுவனமான மிஸ்ட்ரல் AI- உடன் இணைந்துள்ளது.

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு திறன்களின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கும், நிதிச் சேவைகள், அரசு பகிரப்பட்ட சேவைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய தொழில்களில் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சிங்க்டெல் மற்றும் மிஸ்ட்ரல் Al இன்று (ஏப்ரல் 27) ஒரு கூட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் Singtel தனது திறந்த மூல தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் RE:AI -ன் GPU -களை ஒருங்கிணைப்பதன் மூலம் முக்கியத்துவம் மற்றும் பொதுத்துறைப் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட, பன்முகப் பயனாளர்களுக்கான GPU-as-a-Service மற்றும் AI-as-a-Service ஆகியவற்றை வழங்கும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகளை உருவாக்கும்.

மேலும் மிஸ்ட்ரல் Al-யின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பான மற்றும் திறமையான பெரிய அளவிலான மொழி மாதிரிகள் மற்றும் டெவலப்பர் உற்பத்தி திறன் கருவிகளை வழங்குவதன் மூலம் இரு தரப்பினரும் பல்வேறு தொழில் துறைகளுக்கு பொருந்தக்கூடிய உலகளாவிய தீர்வுகளை இணைந்து உருவாக்க உள்ளார்கள்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை விரைவுப்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டு சிறப்பு மையத்தையும் இரு நிறுவனமும் இணைந்து நிறுவ உள்ளனர்.

இந்த மையம் சிங்க்டெல் மற்றும் மிஸ்ட்ரல் Al மற்றும் கூட்டாளர்களின் குழுக்களை ஒன்றிணைத்து, சிங்க்டெல்லின் உள்கட்டமைப்பு மற்றும் மிஸ்ட்ரலின் பல்வேறு தீர்வுகள் மற்றும் பிற பயன்பாடுகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் இணக்கமான ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சூழலை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK