சிங்கப்பூரில் தொழிலாளர் தினம் : சுரங்கப்பாதை மற்றும் பேருந்து சேவை நேரம் அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் தொழிலாளர் தினம் : சுரங்கப்பாதை மற்றும் பேருந்து சேவை நேரம் அதிகரிப்பு..!!

சிங்கப்பூரில் வரவிருக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, உள்ளூர் பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் MRT மற்றும் சில பேருந்து வழித்தடங்களின் சேவைகளின் நேரம் அதிகரிக்கப்பட உள்ளது.

SBS Transit நிறுவனம் இன்று (ஏப்ரல் 16) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டவுன் டவுன் லைன், நார்த் ஈஸ்ட் லைன் மற்றும் செங்காங் – 4ங்கோல் MRT வழித்தடங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி சேவை நேரம் அரை மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

புக்கிட் பஞ்சாங்கில் இருந்து எக்ஸ்போ செல்லும் டவுன்டவுன் லைனில் கடைசி ரயில் அடுத்த நாள் அதிகாலை 12:03 மணிக்கு புறப்படும் அதே நேரத்தில், எக்ஸ்போவிலில் இருந்து புக்கிட் பஞ்சாங் செல்லும் கடைசி ரயில் அதிகாலை 12:64 மணிக்கு புறப்படும்.

நார்த்ஈஸ்ட் லைனில் ஹார்பர் ஃபிரிண்டில் இருந்து புங்கோல் கோஸ்ட் செல்லும் கடைசி ரயில் அடுத்த நாள் அதிகாலை 12:30 மணிக்கு புறப்படும். அதே நேரத்தில் புங்கோல் கோஸ்டில் இருந்து ஹார்பர் ஃபிரண்டிக்கு செல்லும் கடைசி ரயில் நள்ளிரவில் புறப்படும்.

தொழிலாளர் தினமான மே 1 அன்று செங்காங் மற்றும் புங்கோல் MRT நிலையங்களிலிருந்து புறப்படும் கடைசி ரயில்கள் அதிகாலை 1:66 மணிக்கும் 1:09 மணிக்கு புறப்படும்.

SMRT நிறுவனம் மே 30 அன்று வடக்கு – தெற்கு, கிழக்கு -மேற்கு சர்க்கிள் மற்றும் தாம்சன் கடற்கரை வடித்தளங்களுக்கான சேவை நேரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு வழித்தடங்களில் கடைசி ரயில்கள் மே 1 அன்று நள்ளிரவு 12:30 மணிக்கு சிட்டி ஹால் இன்டர் சேஞ்சில் இருந்து புறப்படும்.

சர்க்கிள் வழித்தடத்தில் இரு திசைகளிலும் செல்லும் கடைசி ரயில்கள் ஹார்பர்ஃ பிரண்ட் மற்றும் டோபி காட் நிலையங்களில் இருந்து இரவு 11:30 மணி மற்றும் 11:55 மணிக்கு புறப்படும்.

தாம்சன் கிழக்கு கடற்கரை வழித்த்தடத்தில் இரு திசைகளிலும் செல்லும் கடைசியில ரயில்கள், உட்லண்ட்ஸ் நார்த் மற்றும் பெவர்லி பே நிலையங்களில் இருந்து நள்ளிரவு 12:00 மற்றும் 12:12 மணிக்கு புறப்படும்.

மேலும் நீட்டிக்கப்பட்ட சுரங்க பாதை சேவையுடன் இணைந்து 53 பேருந்து வழித்தடங்களின் சேவை நேரங்களும் நீட்டிக்கப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK