சைக்கோ ஆசிரியரால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்..!!!

சிங்கப்பூர்: பாலர் பள்ளி மாணவியை ஆசிரியர் வேண்டுமென்றே காயப்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஆசிரியர் ஒப்புக்கொண்டார்.
34 வயதான சயீடா கமாருதீன், குழந்தையை தனது கால்களால் பலமுறை இடறி விழச் செய்தார்.
20 மாத சிறுமி இரண்டு முறை கீழே விழுந்து, மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.
மேலும் அந்தக் குழந்தையின் முகத்திலும் காயம் ஏற்பட்டது.
குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, மற்றொரு ஆசிரியர் உதவிக்கு விரைந்தார்.
இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சயீடா செப்டம்பர் முதல் நவம்பர் 2023 வரை சுமார் ஒன்றரை மாதங்கள் பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இச்சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
ஆசிரியர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விசாரணைக்காக சயீடா அடுத்த மாதம் 28 ஆம் தேதி நீதிமன்றத்திற்குத் திரும்புவார்.
அப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் குழந்தைகளை துன்புறுத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 8 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $8,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
