எஸ்ஜி60 தேசிய தினக் கொண்டாட்டத்தில் இந்த உழைப்பு நாயகர்களின் கதைகள் வெளிக்கொணரப்படுகிறது.
உலக வரைபடத்தில் சிறு புள்ளியாக இருந்தாலும் கடந்த 60 ஆண்டுகளாகத் தன் மக்களின் அயராத மற்றும் கடின உழைப்பால் வளர்ந்த நாடக மிளிர்ந்து கொண்டிருக்கிறது சிங்கப்பூர்.
எவரும் அறியாத சில சாதனையாளர்களின் அர்ப்பணிப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
சாதிக்கத் தேவை ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு மட்டுமே தவிர பாலினம் ஒரு தடையில்லை என்று உணர்த்தும் வகையில் இரு பெண்கள் சாதனைப் பற்றிய விவரங்கள் பின்வருமாறு: 💠சுகாதார அறிவியல் ஆணையத்தின் தடயவியல் மருத்துவப் பிரிவில் தடயவியல் தொழில்நுட்ப அதிகாரியாக கடந்த 3 ஆண்டுகளாக தஸ்லீமா ஷம்ஷெருதீன்(30) பணியாற்றி வருகிறார்.
💠 இவரின் பணியானது பிறர் செய்ய யோசிக்கும் பணியாக இருக்கும். ஏனெனில், இவர் சவக்கிடங்கில் பணியாற்றி வருகிறார்.
💠இயற்கைக்கு மாறாக உயிர் பிரிந்தவர்களுக்கும், மரண விசாரணையின் போது தகவலைத் தெரிவிக்கவும் இவரின் உதவியானது மிகுந்த பங்களிக்கிறது.
💠மேலும், இவர் இது போன்ற சடலங்களை தினசரி கையாண்டு வருகிறார். இறப்பிற்கான காரணம் தெரியாத நிலையில் இருக்கும் சடலங்களை நோயியல் வல்லுநர்கள் பரிசோதனை செய்யவும் உதவுகிறார்.
💠இப்பணி குறித்து இவர் கூறியதாவது: பணியில் முதலில் ஈடுபட தொடங்கிய நிலையில் சில நேரம் மிகவும் உடைந்து விடுவேன். அதிலும் ‘குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும்போது என் மனம் குமுறும்’ என்று உணர்ச்சிப் பொங்கக் கூறியுள்ளார்.
💠இந்தப் பணியில் ஈடுபடுவது கெட்ட சகுனம், பணியிடத்தில் துர்நாற்றம் மோசமாக இருக்கும், ஒரு பெண்ணாக எப்படி இந்த வேலை பார்க்க முடிகிறது என பலரும் என்னிடம் கேட்டுள்ளனர் என்று கூறியுள்ளார், தஸ்லீமா.
💠ஆனால், தனது சகோதரியின் பிள்ளைகள் அவர்களின் நண்பர்களிடம் என்னுடைய பணியைப் பற்றி பெருமையுடன் கூறுவது எனக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
✴️சிங்கப்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டர்ஷினி கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.
✴️வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகளின் எண்ணமானது, நம்மைப் பாதுகாப்பாக செல்லவேண்டிய இடத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகின்றனர்.
✴️விமானிக்குத் தேவையான அறிவுறுத்தல்களைத் திரைக்குப் பின்னால் இருந்து விமானிக்குக் கொடுத்து கூடவே பயணிக்கிறார் 30 வயதைச் சேர்ந்த டர்ஷினி தேவராஜ்.
✴️இவருடைய வேலையானது, விமானம் புறப்பட்ட பின்னர் அது வானில் பறந்து மீண்டும் தரையிறங்குன்வரை அதன் பாதுகாப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும்.
✴️இவரின் பணி பற்றி கூறியதாவது: விமானம் வானில் பறக்கும்போது திடீரென மின்னல் அபாயமோ அல்லது வேறு ஏதேனும் அபாயமோ ஏற்படலாம். அதை ரேடார் மூலம் உடனடியாக விமானிக்குத் தகவலைக் கொடுத்தால் தான் வானில் விமானத்தைச் செலுத்த முடியும் எனக் கூறினார்.
✴️பல நாடுகளில் இருந்து வரும் விமானிகளுடன் பேசுவதுடன் மேலும் ஒவ்வொரு நாட்டிற்கும் உச்சரிப்பு வேறுபட்டுக் காணப்படும். இதற்கெனப் பயிற்சியானது ஓராண்டு காலம் எடுத்துக் கொள்வர்.
🔷ரயில் பயணங்கள் சுமூகமாக இருக்க துணை நிற்கிறார் எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் உலாஸ் ராஜன்.
🔷ரயில் பாதையின் சமிக்ஞை முறையில் கோளாறு ஏற்படும் சமயங்களில் ரயில் சேவை பாதிக்கப்படும் போது அதில் உள்ள கோளாறை சரிபார்ப்பதற்கு அவசரகாலச் செயல்பாட்டுக் குழுவின் பொறியியல் பராமரிப்பு மேலாளராக இருக்கிறார். மேலும், ஊழியர்கள் பலரை மேற்பார்வையிடுகிறார்.
🔷”3 நிமிடத்திற்குள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அந்த ரயில் பாதையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும். ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அடுத்த ரயில் வருவதற்குள் ரயில் பாதை சீராக இருக்க வேண்டும் என்பதால் ஊழியர்கள் பம்பரம் போலச் சுழன்று வேலை பார்க்க வேண்டும்” என்று சொன்னார் உலாஸ்.
🔷 பாலஸ்டியர் கால்டெக்ஸ் எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பிரான்சிஸ்குஸ் முருகையா(41) நாள்தோறும் பல வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்.
🔷 இவர் கால் டாக்ஸி சுழற்சி நேர பணி தலைவராக இருக்கிறார். இவர் செய்யும் பணிகள் பல. வாகனங்களை தேர்வு பொருள் நிரப்புவது எரிபொருள் கொள்கலன் வரும்போது அதனை மேற்பார்வையிடுவது போன்றவை ஆகும்.
🔷 இவரை பணியை திறம்பட செய்வதற்கு காரணம் மலேசியா சிங்கப்பூர் இடையே அன்றாடம் பயணம் செய்து சோர்வை தந்தாலும் தன் மனைவிக்கும் இரு பிள்ளைகளுக்கும் இன்பமான வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்பணியில் என்னை அர்ப்பணித்துள்ளார். மேலும், இவர் அதிகாலை 3 மணிக்குள் வீட்டிலிருந்து கிளம்பி காலை 6:30 மணிக்கு பணியை தொடங்கும் பிரான்சிஸ்குஸ் சிங்கப்பூர் தனது அயராத உழைப்பிற்கு இடமளித்துள்ளதாக கூறினார்.
✴️செங்காங் வெஸ்ட் பேருந்து பணிமனையில் பேருந்துகளுக்கான துப்புரவு பணி மேற்பார்வையாளராக இருக்கின்ற ஆனந்த ஜோதி முருகவேல்(35) என்பவர் தூய்மையான பேருந்து பயணத்திற்கு கை கொடுப்பவராக முக்கிய பங்கு வகிக்கிறார்.
✴️ நம்மில் சிலர் அன்றாடம் பொது போக்குவரத்து செய்திகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்று அதில் பொழுது போக்குவரத்து சேவையை பொருத்தமட்டில் சிங்கப்பூரின் நிலை உலக அளவில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.
✴️ இந்த பொது சேவைக்குப் பின்னால் அவருடைய பலருடைய உழைப்பு அடங்கியுள்ளது. மேலும், பொது பேருந்துகளில் ஏறும் போது அது தூய்மையாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருக்க ஒரு பெரிய குழுவின் அயராத உழைப்பு பெரும்பங்கு வகித்துள்ளது.
✴️ கடந்த மூன்று ஆண்டுகளாக இப்ப பணியை செய்து வரும் இவர் ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 25 பேருந்துகளை துப்புரவு பணியை மேற்பார்வையிடுகிறார்.
✴️ இரவு நேரங்களில் வேலை செய்யும் ஆனந்த ஜோதி வஜ்ரா துப்புரவு நினைவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் வஜ்ரா நிறுவனம் சார்பில் எஸ் பி எஸ் ட்ரான்ஸ்பிப் பேருந்து நிறுவனத்துடன் செயல்பட்டு வருகிறார்.
✴️ 2018ல் சிங்கப்பூருக்கு வந்த இவர் இதனை ஒரு வேலையாக பார்க்காமல் சேவை மனப்பான்மையுடன் அணுகுவதாக குறிப்பிட்டுள்ளார்.