சிங்கப்பூரை அதிர வைத்த மோசடி..!!! யார் அந்த போலி SAF அதிகாரி.!!

சிங்கப்பூரை அதிர வைத்த மோசடி..!!! யார் அந்த போலி SAF அதிகாரி.!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆயுதப் படை அதிகாரிகளாக நடித்து உணவகம் மற்றும் கடைகளில் போலியான பெரிய அளவுக் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரு ஆண் உட்பட ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்கள் மூவரும் 17 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 19 ஆம் தேதிகளில் புக்கிட் பாத்தோக் வெஸ்ட், ஃபெர்ன்வேல் லேன், நார்த்ஷோர் டிரைவ் பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனைகளில் பிடிபட்டனர்.

அவர்களில் 28 வயது ஆடவர் குற்றக் கும்பலிடம் பணம் பெற்றுக் கொண்டு சிங்பாஸ் விவரங்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் 17 வயது பெண் மற்றும் 21 வயது ஆடவர் தொலைபேசி இணைப்பைப் பெற உதவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் அந்த தொலைபேசி எண்களில் சில போலியான ‘பேரளவுக் கொள்முதல்’ மோசடிகளுடன் தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉