சிங்கப்பூர்: சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்து சுற்றுலா வாரியம் ஆனது இந்த ஆண்டிற்கான(2025) தரவுகளை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் சீன பயணிகளாகவே இருந்துள்ளனர். சீன பயணிகள் எண்ணிக்கையானது 11.6 மில்லியனை கடந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் இந்த ஆண்டிற்கான எண்ணிக்கையானது கடந்த ஆண்டு ஒப்பிடும்போது 3 விழுக்காடு அதிகமாகியுள்ளது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 1.6 மில்லியன் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 5% அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை புரிந்த இடத்தில் முதலாவதாக சிங்கப்பூர் 2.3 மில்லியனை எட்டியுள்ளது. இரண்டாவதாக இந்தோனேஷியா 1.7 மில்லியனை கொண்டுள்ளது. இந்தியா 8,24,000 கணக்கில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
சிங்கப்பூர் அடுத்த மூன்று மாதங்களில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியே நடத்த உள்ளது. ஃபார்முலா 1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ், டூர் டி பிரான்ஸ் சிங்கப்பூர், வருடாந்திர பயண வர்த்தக கண்காட்சி ITB ஆசியா 2025, உலக வடிவமைப்பு மற்றும் சுகாதார காங்கிரஸ் 2025 மற்றும் பல இசை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் சிங்கப்பூர் உலகம் முழுவதிலும் இருந்து மேலும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.