ஜூரோங் வெஸ்ட்டில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!! என்ன நடந்தது..

ஜூரோங் வெஸ்ட்டில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று(14.12.25) காலை ஜூரோங் வெஸ்ட் பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், இரு பேருந்துகள் கடுமையாக சேதமடைந்தன.

இந்த விபத்தில் காயமடைந்த சில பயணிகள், பேருந்திலிருந்து வெளியேறி சாலையோரத்தில் அமர்ந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இன்று(14.12.25) காலை 10.58 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1, பிளாக் 425 அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மோதலின் போது பேருந்தின் உள்ளே விழுந்ததாக நம்பப்படும் ஒரு பயணி, தரையில் படுத்த நிலையில் மீட்புக்காகக் காத்திருந்ததும் பதிவாகியுள்ளது. இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்து நடந்த உடனே போலீசார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவி வழங்க ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன. இன்று காலை 11.20 மணி நிலவரப்படி, விபத்து நடந்த பகுதி விசாரணைக்காக போலீசாரால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK