எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..??
சிங்கப்பூர்: டௌவுனர் ரோடு, சிராங்கூன் ரோடு, லாவண்டர் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளில் 65 வயது வேன் ஓட்டுநர் நான்கு கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் இரண்டு லாரிகள் என எட்டு வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.
இந்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறைக்கு டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 1:35 மணி அளவில் தகவல் கிடைத்ததை அடுத்து விபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுனர் மயக்க நிலையில் சென்றதால் மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
ராஃபிள்ஸ் அவென்யூ வில் இருக்கும் ஒரு போக்குவரத்து கம்பத்தின் மீது இந்த ஆரஞ்சு நிற வேன் மோதி நின்று உள்ளதை இந்த படத்தில் காண முடிகிறது மேலும் அந்த வானின் கண்ணாடிகளும் நொறுங்கி இருந்ததை படத்தில் காணலாம்.
சிகிச்சைக்குப் பிறகு அந்த வேன் ஓட்டுனரான 65 வயது நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு 2025 முற்பாதியில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் அல்லது காய முற்றவர்கள் என்பதை 2025 ஆகஸ்டில் போக்குவரத்து காவல்துறை அரையாண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. இது கடந்த 2024ஆம் ஆண்டு முற்பாதியை காட்டிலும் சற்று அதிகரித்துள்ளது.