உணவு ஏன் நஞ்சாக மாறுகிறது..?? தெரிந்து கொள்வோமா..??
கெட்டுப்போன அல்லது அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்பே உணவு நன்றாக எனப்படுகிறது. கோடை காலத்திலோ அல்லது வெப்பநிலை அதிகம் நிலவும் காலங்களிலோ உணவு பொருட்களில் கிருமிகள் அல்லது நச்சுகள் விரைவாக உருவாகிவிடும்.
வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் வயிற்று பிடிப்பு, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும் பொதுவாக சில மணி நேரங்களுக்குள் அறிகுறிகள் தோன்ற தொடங்கும்.
உணவு எப்படி நஞ்சாகிறது? உணவை முறையாக கையாளாமை, சுத்தமின்மை, சுகாதாரக் குறைவு காரணமாக உணவு நஞ்சாகி விட கூடும். அதாவது சரியாக வேக வைக்கப்படாத உணவு மற்றும் பழைய உணவுகளில் பாக்டீரியாக்கள் வேகமாக பெருகிவிடும்.
அவை உணவை கெட்டுப் போக செய்துவிடும் அழுக்கான கைகள், அழுக்கான பாத்திரங்களில் உணவை பரிமாறுவதாலும் உணவு அசுத்தம் அடையலாம்.
சமைத்த மற்றும் சமைக்காத உணவை ஒன்றாக சேர்த்து வைப்பதன் மூலமாகவும் கிருமிகள் வேகமாக பரவி உணவை நஞ்சாக்கி விடும். அசுத்தமான நீர் திறந்தவெளி உணவும் ஒருவகையில் உணவு நன்றாக காரணமாகிவிடும்.
எந்த கிருமிகளால் ஏற்படுகிறது? சால்மோனெல்லா, ஈ கோலை போன்ற பாக்டீரியாக்கள், நோரோ வைரஸ், ஹெபடைடிஸ் ஏ வகையைச் சேர்ந்த வைரஸ்கள், ஜியார்டியா, கிரிப்டோஸ்போரிடியம் போன்ற ஒட்டுண்ணிகள், ஸ்டாபிலோகோகஸ் ஆரியஸ், கிளாஸ்ட்ரியம் போட்யூலினம் போன்ற நஞ்சுகள் காரணமாக உணவு நஞ்சாதல் செயல்முறை விரைவாக நடக்கிறது.
கோடை காலத்தில் ஏன் அதிக பாதிப்பு உண்டாகிறது? கோடைகாலத்திலும் அல்லது அதிக வெப்பநிலை நிலவும் சமயங்களிலோ வெப்பநிலையும் ஈரப்பதமும் அதிகரிக்கும். இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கும் பெருகுவதற்கும் உகந்த சூழலாகும்.
அதிலும் 4 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையில் கிருமிகள் வேகமாக பெருகிவிடும். இந்த நேரத்தில் சமோனெல்லா, ஈகோலை மற்றும் ஸ்டேபிளோகாக்கஸ் போன்றவை வேகமாக பரவுவதால் உணவு விரைவில் கெட்டுப் போகிறது. இதனால் தான் இந்த சமயத்தில் உணவு நஞ்சாதல் பாதிப்பு அதிகரிக்கிறது.
உணவு நஞ்சாதல் நோய்த்தொற்றாக பரவக்கூடியதா? உணவு நஞ்சாதல் என்பது நேரடியாக தொற்றக்கூடிய நோய் அல்ல. எனினும் பாக்டீரியாவும், வைரஸோ காரணமாக இருந்தால் அவை மூலம் பரவக்கூடும். வைரஸ்கள் குறிப்பாக நோரோ வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியவை.
எனவே கைகளை கழுவுவதும் சுகாதாரத்தை பேணுவதும் முக்கியமானது அதே வேளையில் ஸ்டாபிலோகாக்கஸ் ஆரியஸ், கிளாஸ்ட்ரியம் போட்யூலினம் போன்றவை காரணமாக இருந்தால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.
எந்த வகையான உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்? சில உணவுகளில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரும். எனவே அந்த உணவுகள் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். குறிப்பாக பச்சையான அல்லது முழுமையாக வேக வைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகளில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் பால் பொருட்களும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
நறுக்கி வைக்கப்பட்ட பழ துண்டுகள், காய்கறிகள், தெருவோர உணவுகள் விரைவில் மாசுபடலாம்.
உணவு நச்சுத்தன்மை அடைந்தால் முதலில் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் என்ன? நச்சுத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் (உப்புச் சத்துகள்) குறையலாம். எனவே உடலின் நீர்ச்சத்தை பராமரிப்பது முக்கியம். மேலும் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு அளிக்கும் உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
கிச்சடி, தயிர், வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உண்ணலாம். சிறிது இடைவெளியில் தண்ணீர் குடிக்கலாம். ஒஆர்எஸ் கரைசல், எலுமிச்சை நீர், இளநீர், மோர் ஆகியவற்றை அருந்தலாம். கடினமான வேலைகளை தவிர்க்க வேண்டும்.
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உடல் பலவீனம் அல்லது நீர் சத்து குறைபாடு ஏற்படும்போது கண்டிப்பாக மருத்துவ வரை அணுக வேண்டும்.
எதை உண்ண வேண்டும் எதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்? வயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுக்காத மற்றும் எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். பொறித்த அல்லது காரமான உணவுகள், எண்ணெய் உணவுகள் முளைகட்டிய தானியங்கள், பால், பாலாடை கட்டி பன்னீர் துரித உணவுகள், பழைய உணவுகள், காபின் கலந்த பானங்கள் மற்றும் மதுபானம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்