பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..??

பெடோக்கில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூர்: பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 3 இல் ஒரு திடுக்கிடும் சம்பவமானது நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து காணொளி பதிவானது சிங்கப்பூர் இன்சிடென்ஸ் என்ற முகநூல் குழுவில் பதிவேற்றப்பட்டிருந்தது.

அங்கு ஒருவர் தெருவில் நடந்து சென்று கொண்டே ஒரு ரம்பத்தை ஓங்கி கொண்டு இருந்துள்ளார். காவல்துறையினருக்கு நேற்று (ஜூலை 5) பிற்பகல் சுமார் 3:25 மணி அளவில் புகார் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

அங்கு வந்த காவல்துறையினர் ஆயுதத்தை கீழே போடுமாறு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் வன்முறையில் ஈடுபட மேலும் முயற்சித்துள்ளார்.

அதிகாரிகளில் சிலர் அந்த நபரை தரையில் அழுத்தி பிடிக்க மற்ற அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் இந்த தகவல் ஆனது முகநூல் குழுவில் பதிவிடப்பட்ட காணொளி மூலம் தெரியவந்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு அவசர கால பணியாளர்களும் தயார் நிலையில் இருந்ததாகவும் காணொளி காட்சியில் தெரியவந்துள்ளது. மேலும் கையுறை அணிந்த ஒரு காவலர் வன்முறையில் ஈடுபட முயன்றால் நபர் வைத்திருந்த ரம்பத்தை பிடித்துள்ளதும் அந்த காணொளி பதிவில் தெரிந்தது.

இறுதியாக காவல் தறையினர் பொது இடத்தில் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்த காரணத்திற்காகவும் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காகவும் 55 வயதைச் சேர்ந்த அன் நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

காவல்துறையினர் அவரை கட்டுப்படுத்துவதற்காக மின் அதிர்ச்சி துப்பாக்கியை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

குடிமை தற்காப்பு படையினருக்கு நேற்று ஜூலை 5 பிற்பகல் 325 மணிக்கு தகவல் அறிக்கை கிடைத்ததாகவும் அதனை தொடர்ந்து அந்த நபரை சாங்கி பொது மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முக்கியமாக இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. போதைப் பொருள் தொடர்புடைய இந்த வழக்கு விசாரணைக்காக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு இன்னும் விசாரணையில் தான் உள்ளது என்றும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK