உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!!

உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருட்டு..!! 32 வயது பெண் கைது..!!

சிங்கப்பூர்: உட்லண்ட்சில் மோட்டார் சைக்கிள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 32 வயது பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த பெண் மீது இன்று (ஜூன் 26) நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் 23ஆம் தேதி அன்று மாலை சுமார் 6 மணி அளவில் உட்லண்ட்ஸ் 52 அவென்யூவில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு புகார் வந்திருந்தது.

புகார் கிடைத்ததையெடுத்து, உட்லண்ட்ஸ் காவல்துறையினர் கள விசாரணைகள் மற்றும் காவல்துறை கேமராக்களின் காணொளி பதிவுகளின் மூலம் மோட்டார் சைக்கிள் திருடிய குற்றவாளியின் அடையாளத்தை உறுதி செய்து, அவரை கைது செய்தனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த மாதம் (ஜூன்) 22 ஆம் தேதி அன்று சாவிகள் அதிலேயே இருந்த நிலையில் உரிமையாளர் இல்லாத ஒரு மோட்டார் சைக்கிளை அந்த பெண் பார்த்துள்ளார்.

அதற்குப் பின்பு அந்த மோட்டார் சைக்கிளை அப்பெண் எடுத்துச் சென்றுள்ளார். திருடப்பட்ட அந்த மோட்டார் சைக்கிளைக் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 81-ல் உள்ள வாகனம் இருக்கும் இடத்தில் திருடப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கிலும் இந்த பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தற்போது தெரிவித்துள்ளது.

தண்டனை சட்டத்தின் 379A பிரிவின் கீழ், கார் திருட்டு வழக்கில் அந்த பெண் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK