இந்த திட்டத்தில் டெங்கு பரவுவதற்கு காரணமாக உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை அழிப்பதற்காக வொல்பாக்யா என்ற கிருமியுள்ள ஆண் ஏடிஸ் கொசுக்களைப் பெண் ஏடிஎஸ் கொசுக்கள் இருக்கும் இடத்தில் விடப்படும்.
அவை ஏடிஸ் பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும். இனப்பெருக்கத்தால் உருவாகும் முட்டைகள் பொறிக்கப்படுவதில்லை.
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏடிஸ் கொசுக்களை உருவாக்கும் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையில் ஒரு வாரத்திற்கு 5 மில்லியன் கொசுக்கள் உருவாக்கும் வசதி இருந்தது.
இந்த திட்டம் குறித்து தேசிய சுற்றுபுற அமைப்பு கூறியதாவது: 👉🏻முதன் முதலில் திட்டத்தைச் செயல்படுத்திய போது பெண் ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கையானது 80% முதல் 90% வரை குறைந்திருப்பதாக கூறியது.
👉🏻சிங்கப்பூரில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 8 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
👉🏻புக்கிட் பாஞ்சாங், பயனியர், தோ பாயோ, லிட்டில் இந்தியா மற்றும் அங் மோ கியா ஆகிய ஐந்து பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறியது.
👉🏻இந்தத் திட்டத்தால் டெங்கு காய்ச்சல் பரவும் சம்பவங்கள் ஆனது 70% குறைந்துள்ளதாகவும் தேசிய சுற்றுப்புற அமைப்பானது கூறியுள்ளது.