நண்பர்களின் தூண்டுதலால் மோசடி வழக்கில் சிக்கிய 19 வயது சிறுவன்..!!

நண்பர்களின் தூண்டுதலால் மோசடி வழக்கில் சிக்கிய 19 வயது சிறுவன்..!!

சிங்கப்பூரில் வேலை செய்ய சோம்பேறிப்பட்ட 19 வயதை சேர்ந்த முகம்மது ரீட்ஸ்வாண்டி மஸ்லி என்ற சிறுவன் கிட்டத்தட்ட 25 செங்காடுகளை நண்பர்களின் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி இருக்கிறான்.

அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டு வீட்டில் இருந்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறான்.

இந்த சிம் கார்டுகளில் இரண்டு சிம் கார்டுகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி பல மோசடியில் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்தவர்.

இதை அறிந்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தபோதும் நண்பர்களின் உதவியால் இந்த மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தான்.

மேலும் சிம் கார்டுகளை பதிவு செய்து இவர்களுக்கு கொடுத்ததால் நவம்பர் 2024 இல் அவருக்கு $120 வழங்கியதும் தெரியவந்தது.

கைது செய்த பின்னர் நீதிமன்றத்தில் நேற்று டிசம்பர் 16ஆம் தேதி ஆஜர் படுத்திய போது, நீதிமன்றத்தின் முன்பாக தனது குற்றங்களை ஒப்புக்கொண்டான்.

நண்பர்களின் தூண்டுதல் காரணமாகவே இந்த மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளான்.

இந்த மோசடியில் $35,603 தொகையை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளான். மேலும் இதுபோன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளான்.

இந்த வழக்கு குறித்த தண்டனை வழங்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளி ஆனா 19 வயது சிறுவனை மறுவாழ்வு பயிற்சி மையத்திற்கு அனுப்புவதற்கு மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK