சிங்கப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்து..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்து..!!

சிங்கப்பூரில் இன்று காலை 6:30 மணி அளவில் ஃபெடோக் நார்த் அவென்யூ மற்றும் அப்பர் சாங்கி சாலை சந்திப்பில் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் பேருந்து மற்றும் கார் சிக்கியுள்ளது.

இந்த விபத்து குறித்த காணொளி ஆனது Roads.sg என்ற சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று காயம் அடைந்த 52 வயதை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய வாகனத்தின் ஓட்டுனர்கள் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் ஓட்டுநர்களிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK