சிங்கப்பூரில் கனரக EV வாகனங்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!!

சிங்கப்பூரில் கனரக EV வாகனங்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் கனரக மின்-வாகனங்களுக்கு மிக அதிவேக மின்னூட்ட வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஐந்து நிமிடங்களில் 200 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அளவுக்கு மின்சாரம் சார்ஜ் செய்ய முடியும்.

கனரக மற்றும் வர்த்தக வாகனங்களுக்காக இந்த மின்னூட்ட முகப்புகள் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக நான்கு அதிவேக மின்னூட்ட முகப்புகள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.

இந்த சேவையை SP Mobility நிறுவனம் வழங்குகிறது. கனரக மின்-வாகனங்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம், அதிகமான வர்த்தக வாகன உரிமையாளர்கள் மின்-வாகனங்களைத் தேர்வு செய்வார்கள் என அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முழுமையாக மின்னூட்டம் செய்ய, வழக்கமான மின்னூட்ட முகப்புகளைவிட கட்டணம் 5 சிங்கப்பூர் டாலர் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதினாலும், நேரம் மிச்சமாகும் என்பதால் இந்த வசதி வர்த்தகத் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த மின்னூட்ட அமைப்பில், முன்கூட்டியே மின்கலனில் சேமிக்கப்பட்ட மின்சாரமும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மின்சாரக் கட்டமைப்பின் மீது ஏற்படும் அதிக பளுவை குறைக்கும் வசதியாக இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK