ஜப்பானில் Sold Out ஆன கொரில்லா பொம்மை..!! என்ன Special..!!
ஜப்பானில் வைரலான வீடியோ தற்பொழுது உலகம் எங்கும் பரவி பாசப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள இந்த கொரில்லா பட்டு பொம்மை தற்பொழுது உள்ளூரில் முழுவதுமாக விற்று தீர்ந்து உள்ளது.
ஜப்பானில் உள்ள இச்சி காவா மிருகக்காட்சி சாலையில் உள்ள பஞ்ச் என்ற குட்டி குரங்கை அதன் தாயார் இளம் வயதிலேயே கைவிட்டது. எனினும் அந்த குட்டி குரங்கானது ஒரு கொரில்லா பட்டு பொம்மையை கட்டிப்பிடித்து வாரு இருக்கும் வீடியோ பதிவானது தற்போது பரவலாகி வருகிறது.
இது குறித்த வீடியோ பதிவானது வைரலாகி வந்த நிலையில் தற்போது ஜப்பானில் இந்த பொம்மையை வாங்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இந்தப் பாதுகாப்பு உணர்வை கண்டறிவதற்கு இது தொடர்ந்து அதன் மிருகக்காட்சி சாலை பராமரிப்பாளர் வழங்கிய இந்த கொரில்லா பட்டு பொம்மையை எங்கு சென்றாலும் கையிலே பிடித்துக் கொண்டு செல்லும் அந்த அழகான காட்சி பதிவு அனைவரிடத்திலும் பேசப்பட்டு வருகிறது.
அந்தக் குரங்கின் அழகான இதயத்தை உடைக்கும் தோற்றம் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பட்டு பொம்மையை வாங்குவதற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டுள்ளது.
தி வாஷிங்டன் போஸ்ட் என்ற கூற்றுப்படி இந்த கொரில்லா பொம்மை அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட உலகம் எங்கிலும் உள்ள பல நாடுகளில் விற்பனை விற்று முடிந்துள்ளது.
ஐ கே இ ஏ என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது விரைவில் இந்த கொரில்லா பொம்மை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கொரில்லா பட்டு பொம்மையின் விலை ஆனது $19.90 என்று நிர்ணயிக்கப்பட்ட ஆன்லைனில் தற்போது Sold Out ஆகியுள்ளது. மேலும் மூன்று உள்ளூர் கடைகளிலும் விற்பனை முடிக்கப்பட்டது.
மற்றொரு சிறிய 20 சென்டிமீட்டர் கொரில்லா பொம்மை ஜூரோங் கிழக்கில் உள்ள ஜம் என்ற மாலில் மட்டுமே தற்பொழுது விற்பனைக்கு உள்ளது. மேலும் சில நெட்டிசன்கள் பொம்மையை அதிக விலைக்கு மறு விற்பனை செய்து வருவதாக வலைய தளத்தில் தெரிய வருகிறது.
பல பயனர்கள் கொரில்லா பொம்மையை 100 முதல் 300 டாலர் வரை விற்பனை செய்வதாக மின் வணிக தளமான eBay இல் தெரிய வருகிறது. உள்ளூரில் பயன்படுத்தப்படும் இணையதளமான Carousell இலும் இந்த பொம்மையை $40 முதல் $50 வரை விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.