மலேசியக் காவல்துறை தளபதி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு..!!!
பெட்டாலிங் ஜெயா:மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா பகுதியில், புக்கிட் காயு ஹித்தா எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (AKPS) தளபதி நசருதீன் நசீர் ஓட்டிச் சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விசாரணை தொடர்ந்துவரும் நிலையில், கைதானோர் எத்தனை பேர் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இச்சம்பவம் நேற்று (25.02.26)அதிகாலை மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகே இடம்பெற்றது. நசருதீன் எந்த காயமும் இல்லாமல் தப்பினார். பள்ளிவாசலுக்கு அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,இரண்டு நபர்கள் கறுப்பு நிற உடையும் முகம் மறைக்கும் தலைக்கவசமும் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்து அவரின் காரை அணுகினர் என்று கெடா காவல்துறை தலைவர் அட்ஜ்லி அபு ஷா தெரிவித்தார்.
அதன்படி, சந்தேக நபர்களில் ஒருவர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதால், காரின் பின்புற வலக்கதவும் முன்புற பயணிக் கதவும் சேதமடைந்துள்ளது. துப்பாக்கி பகுதி தானியக்க ஆயுதமாக இருந்ததும், தோட்டாக்களில் சிதைந்த துண்டுகள் கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் மேலும் தெரியவந்தது, நகர்ந்த வாகனத்தை நோக்கி கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தூரத்தில் இருமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.