பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..!

பயனர்கள் அவதி..!சிங்கப்பூரில் மொபைல் சேவையில் தடை..!

சிங்கப்பூரில் உள்ள தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனமான சிங்டெல்லில், இன்று(மார்ச் 16) காலை மொபைல் சேவைகள் பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிங்டெல்லின் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதை தொடர்ந்து சிங்டெல் நிறுவனமானது, அவர்களது பொறியாளர்களைக் கொண்டு பிரச்சனையின் காரணத்தைக் கண்டறிய ஏற்பாடு செய்துள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று ( மார்ச் 16) காலை 11:13 மணி அளவில் பதிவிட்டுள்ளது.

இதற்கிடையில் பயனர்கள் தொலைபேசியில் அழைப்பு விடுக்க முடியாமலும், குறுஞ்செய்திகளை அனுப்ப முடியாமலும் ,இணையத் தொடர்பு இல்லாமலும் ,ரோமிங் (Roaming) சேவை மற்றும் GOMO சேவைகளைப் பயன்படுத்த முடியாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த பிரச்சனைகள் குறித்து 5,800 க்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன்டிடெக்டர் (Downdetector) என்னும் நெட்வொர்க் கண்காணிப்பு தளத்தில் அவர்களது புகார்களை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிங்டெல் நிறுவனம் இன்று(மார்ச் 16) மதியம் 12:01 மணியளவில் வெளியிட்ட பதிவு பின்வருமாறு:

சேவைகள் படிப்படியாக சரி செய்யப்படும் என்றும் அதுவரை பயனர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும்,இதற்கிடையில் பயனர்கள் தங்களது மொபைல் போன்களை அணைத்து மீண்டும் மறு இயக்கம் செய்து பயன்படுத்த முயற்சி செய்யுங்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சிரமத்திற்கு சிங்டெல் நிறுவனம் பயனர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK