சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு..!!

சிங்கப்பூர் : விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள துணை சுகாதாரக் காப்பீட்டு கொள்கைகளுக்கான புதிய விதிமுறைகளை சுகாதார அமைச்சகமானது இன்று (ஏப்ரல்1) முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

முன்பு இருந்த அதிகபட்ச காப்பீட்டுத் திட்டங்களின் பாலிசிகளுடன் ஒப்பீடுகையில், புதிய துணை பாலிசிகள் (Policy) 35% 40% வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளானது அதிக மருத்துவச் செலவுகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிங்கப்பூரர்கள் தனியார் சுகாதார காப்பீட்டையும் வாங்க முடிகின்ற அளவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகம், துணை பாலிசிகள் அதிக பாதுகாப்பை வழங்குவதாக நுகர்வோர்கள் நம்புவதை தாங்கள் புரிந்து கொண்டதால், மிகக்குறைந்த இணைக் கட்டணங்களைக் கொண்டிருப்பது போன்ற பாலிசிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க நுகர்வோருக்கு பாதுகாப்பு வழங்கும் எனவும், விரிவான சுகாதார காப்பீட்டுத் துணை பாலிசிதாரர்கள் மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்த தங்களது மெடிசேவ் நிதியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யே குங் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவு பின்வருமாறு:
அளவுக்கு மீறிய துணைக் காப்பீட்டு விதிகள் சுகாதாரச் செலவுகளையும் காப்பீட்டுத் தொகைகளையும் அதிகரிப்பதாக காணொளிகள் மற்றும் நாடாளுமன்ற கூட்டங்களின் மூலம் நான் விளக்க முயல்கிறேன். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக செலுத்த வேண்டிய அதிகப்படியான இணைச் செலவுகளை ஈடுகட்ட ஆண்டு காப்பீட்டுத் தொகை சேமிப்பே போதுமானதாக இருக்கிறது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

விதிமுறைகள்:
👉🏻இன்று முதல் துணைக் காப்பீடு வாங்குபவர்கள் புதிய வகை துணைக் காப்பீட்டுத் திட்டங்களிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉🏻கடந்த ஆண்டு (2025) 27ஆம் தேதிக்கும், இந்த ஆண்டு (2026) மார்ச் 31ஆம் தேதிக்கு இடையில் துணைக் காப்பீடு வாங்கியவர்கள், 2028 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தங்களது பாலிசியை புதுப்பிப்பதற்கு முன்பு ஒரு புதிய துணைக் காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது உள்ள பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை மறு ஆய்வு செய்வதற்கும், புதிய துணைக் காப்பீடானது தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் நிதி ஆலோசர்களிடம் சுகாதார அமைச்சகமானது பரிந்துரைத்துள்ளது.

சிங்கப்பூரர்களுக்கு பொது சுகாதார நிறுவனங்களும் குறைந்த விலையில் சுகாதார சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK