சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இளைஞர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் சாலை விபத்து..!! இளைஞர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூர் : துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நேற்று (மார்ச் 31) மாலை பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

அந்த விரைவுச் சாலையில் ஏற்கனவே பல விபத்துக்கள் நடந்ததையெடுத்து, 3 கார் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து நடந்துள்ளது.

சவுத் புவனா விஸ்டா சாலை வெளிவாயிலுக்கு அருகில் மாலை 6:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

விபத்தில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்து, சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், 21 வயதுடைய இளைஞரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவ இடத்தில் காவல்துறை வாகனங்களும், விரைவுச்சாலை கண்காணிப்பு மற்றும் ஆலோசனை கட்டமைப்பு வாகன மீட்பு பிரிவினரும் இருப்பது போன்ற காணொளியானது டெலிகிராம் செயலியில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அதில் மோட்டார் சைக்கிளின் பாகங்கள் சிதறி கிடப்பதும் தெரிகிறது.

விபத்து நடந்ததையொட்டி விரைவுச்சாலையின் 3 பாதைகள் மூடப்பட்டன. இதனால் சவுத் புவனா விஸ்டா சாலையில் துவாஸ் நோக்கி செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

நிலப் போக்குவரத்து ஆணையம் ஆனது மாலை 6:53 மணி அளவில் தனது எக்ஸ் தளத்தில் விபத்து குறித்து பதிவிட்டிருந்தது. அப்பதிவில் 2 மற்றும் 3வது சாலைப் பாதைகளில் செல்லும் ஓட்டுநர்கள் அந்தப் பாதைகளைத் தவிர்த்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK