கிங் மிங் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்து..!!

கிங் மிங் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் கிங் மிங் திருவிழா நடைபெற்றது. அங்கே புக்கிட் பிரவுன் கல்லறைக்கு மக்கள் அனைவரும் வழிபாடு செய்ய வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பல இடங்களில் தீ பற்றியது.

இந்தச் செய்தியை தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) இன்று (ஏப்ரல் 2) தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது. இந்த பதிவில் கல்லறைக்கு வழிபாடு செய்ய வருபவர்கள் ஊதுபத்தி அல்லது காகித பைகள் எரித்த காரணத்தினால் இந்த தீ விபத்துக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளது.

மேலும் வறண்ட தாவரங்கள் வெப்பமான வானிலை மற்றும் பலத்த காற்று ஆகியவற்றின் மூலமாகவும் தீ பரவி இருக்கலாம்.

இந்த தீ விபத்துக்களை தடுப்பதற்கு ஊதுபத்திகளை எரிக்கும் போது எல்லா நேரங்களிலும் சற்று கண்காணிப்போடு இருக்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

சாம்பல் மற்றும் புகையின் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்காக அதிக அளவிலான ஊதுபத்திகளை நேரடியாக பொருள் தரையில் வைக்க கூடாது என்பதையும் அதிகாரிகள் நினைவூட்டியுள்ளனர்.

இந்த தீ விபத்துக்கள் மூலமாக பார்வையாளர்களுக்கு பாதுகாப்பு அபாயம் ஏற்படுவதோடு சுற்றுச்சூழலையும் சேதப்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்று NEA தெரிவித்திருக்கிறது.

எனவே பொதுமக்கள் ஊதுபத்திகளை குப்பையாகவும் அல்லது சிதறடித்தோம் போடாமல் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் கல்லறைக்கு வந்த படையல் போடும் பொழுது அதற்காக பயன்படுத்தப்படும் உணவுகளை கவனிக்காமல் விட்டு விடக்கூடாது.
ஏனெனில் இதன் மூலமாக பூச்சிகளின் கவனம் ஈர்க்கப்படும்.

பொது சுகாதாரத்தை பாதிக்குமாறு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK