சிங்கப்பூரில் ஆஸ்திரேலியா நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் ஆஸ்திரேலியா நபர் மீது குற்றச்சாட்டு..!!

சிங்கப்பூரில் மார்ச் 19ஆம் தேதி காலை சுமார் 6.40 மணியளவில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காக 63 வயதான ஆஸ்திரேலியா நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
சாங்கி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு, ஆஸ்திரேலிய நபர் தகாத வார்த்தைகளால் திட்டியும் காலணிகளை வீசி எறியவும் ஆரம்பித்திருக்கிறார்.

இவரை அமைதி படுத்த விமான பணியாளர்கள் பலமுறை முயற்சி செய்த போதிலும் அந்த நபர் ஒரு விமான பணியாளரிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து விமானி சாங்கி விமான நிலையத்திற்கு திரும்ப செல்ல முடிவு செய்தார். அங்கு வந்தடைந்ததும் அந்த நபர் விமான நிலைய காவல்துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

விமானத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 63 வயதான ஆஸ்திரேலியர் மீது நீதிமன்றத்தில் இன்று மார்ச் 2ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையை காவல்துறையினர் நேற்று மார்ச் 1ஆம் தேதி வெளியிட்டனர். அதில் முதற்கட்ட விசாரணையின் போது ஆஸ்திரேலியா நபர் போதையில் இறந்ததாக தெரியவந்துள்ளது.

விமான பணியாளர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி முறையற்ற நடந்து கொண்ட காரணத்திற்காக இவர் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமானால் இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது $100,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வாய்மொழி மூலமாக மிரட்டல்கள், உடல் ரீதியான தாக்குதல்கள் மற்றும் விமான பணியாளர்களின் கடமைகளில் குறிக்கிடும் விதத்தில் நடந்து கொள்ளும் விதம் இவை அனைத்தும் விமான பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடியது என்று காவல்துறை கூறியுள்ளது.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது விமான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK