சிங்கப்பூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம்..!! இரங்கல் தெரிவித்த அடிடாஸ் சிங்கப்பூர்..!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம்..!! இரங்கல் தெரிவித்த அடிடாஸ் சிங்கப்பூர்..!!

உள்ளூர் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான யூஜின் லிம், “தி ஹை பாந்தர்ஸ்” என்ற உள்ளூரில் நிதி திரட்டும் ஓட்டப்பந்தய குழுவின் இணை நிறுவனராகவும் அடிடாஸ் சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய சமூக தலைவராகவும் இருந்தார்.

2024 ஆம் ஆண்டில் இவருக்கு நான்காம் நிலை யூரோதீலியல் காசினோமா என்ற புற்றுநோய் வகை இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தப் புற்றுநோய் அவரது நுரையீரல் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் கடுமையான நோய் நிலையிலும் கூட அவர் தொடர்ந்து ஓடினார்.

மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு வாரத்திற்கு நான்கு முறை கூட ஓடி பயிற்சி செய்தார். மற்றவர்களின் ஆதரவுடன் இவர் ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக கடந்து முன்னேறுவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் எனவும் ஒருமுறை தெரிவித்து இருந்தார்.

மேலும் இவ்வாறு தனது புற்று நோய்க்கு எதிரான போராட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு உள்ளூர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பேசியுள்ளார். இதன் மூலமாக இளைஞர்கள் இடையே அதிகரித்த வரும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆரம்பத்திலேயே நோயை கண்டறிவதற்கு உண்டான வழிமுறைகளையும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மக்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர் விரும்பினார்.

யூஜின் லிம் அவர்களுக்கு ஏப்ரல் ஏழாம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், நான்காம் நிலை புற்றுநோயுடன் போராடிய இவர் ஏப்ரல் 10 அன்று தனது 45 வயதில் காலமானார்.

திருமணமான மூன்று நாட்களுக்கு பிறகு நிகழ்ந்த இந்த துயரமான சம்பவம் குறித்து அவரது மனைவி சோஃபி சந்திரா அவர்கள் ஏப்ரல் 10 அன்று சமூக ஊடகங்களில் அவரது மறைவு குறித்த செய்தியை பதிவிட்டார்.

இவருடைய மன உறுதி பல ஓட்டப்பந்தய ஆர்வலர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் இந்த செய்தியை தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு அவரை ஒரு முன்னுதாரணமாகவும் நண்பராகவும் வழிகாட்டியாகவும் பாராட்டியுள்ளனர்.

அடிடாஸ் சிங்கப்பூர் அவரை ஓட்டப்பந்தய சமூகத்தில் ஒரு முக்கிய நபர் என கூறியதோடு மட்டுமல்லாது அவரது மன உறுதி மற்றவர்களுக்கு தொடர்ந்து ஒரு உத்வேகம் அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK