ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தானில் திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

மெலாவி என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஏப்ரல் 16 அன்று காலை வானில் பறக்க தொடங்கிய ஐந்தாவது நிமிடமே ஏர்பஸ் H130 என்ற ஹெலிகாப்டரின் தொடர்ப திடீரென துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் மீட்பு வாரிய தலைவர் முகமது சயாபி கூறினார்.

ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் பரந்ததாக குறிப்பிட்ட இடம் அடர்ந்த காடுகளையும் செங்குத்தான மலைப்பாங்கு நிலப்பரப்பையும் கொண்ட ஒரு பகுதியாக இருந்தது என்று தெரிவித்தார்.

தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே ஹெலிகாப்டரின் வால் பகுதி சிதைந்து கிடந்ததை மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.

இந்த விபத்தில் பயணம் செய்த எட்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்நிலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று(ஏப்ரல் 17) தெரிவித்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK