சிங்கப்பூரில் ஜோகூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்து..!! பாதசாரி படுகாயம்..!!
சிங்கப்பூர் : ஜோகூர் பாலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதியதில் அங்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது அன்று இரவு 9:15 மணியளவில் ஜோகூர் செல்லும் பாதையில் நடந்ததாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
இந்த விபத்தில் சிக்கியது ஒரு பெண் என்றும், சம்பவ இடத்தில் இருந்து அவரது கணவரின் அழைப்புகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்காமல் மயங்கி கிடந்தார் என்றும் கூறப்படுகிறது.
மலேசியப் பக்கத்தில் உள்ள பாலத்தில் நடப்பதைத் தடை செய்யும் விதிமுறை குறித்து எச்சரிக்கை விடுக்கம் வகையில், அங்கு புதிய பலகைகள் வைக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
“பாதசாரிகளுக்கு அனுமதி இல்லை” என்பதை காட்டும் அந்த பலகையுடன், வேகவரம்பு மணி 50 கிலோமீட்டர் என்பதை காட்டும் பலகையும் அவ்விடத்தில் வைக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து காரணமாக மோட்டார் சைக்கிள் பாதை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆனால் அன்று (ஏப்ரல் 14) இரவு 9.34 மணிக்குள் இந்த விபத்து நிகழ்ந்த பகுதி சரி செய்யப்பட்டு போக்குவரத்து திறக்கப்பட்டது என்று ஆணையம் கூறியுள்ளது.