சிங்கப்பூர் - நியூசிலாந்து புதிய ஒப்பந்தம்..!! எதற்காக..??
சிங்கப்பூர் – நியூசிலாந்து அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்துத் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யப் போவதாக கூறியுள்ளன.
தற்பொழுது நிலவி வரும் நெருக்கடி காலத்திலும் விநியோக நடவடிக்கைகள் சீராக செயல்படுவதற்கு புதிய ஒப்பந்தத்தில் இருதரப்பும் நேற்று (மே 4) கையெழுத்திட்டு உள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டுள்ளனர்.
தற்காப்பு,பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு உணவு, உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைக்க இருவரும் இந்த புதிய உடன்பாட்டை தெரிவித்துள்ளனர். வர்த்தகம் எந்த ஒரு தடையும் இன்றி நடைபெற நாங்கள் துடிப்புடன் செயல்படுவோம் என்று சிங்கப்பூர் பிரதமர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இத்தகைய உடன்பாடு என்பது முதல் முறையாகும். உலக அளவில் உடன்பாடு எட்டப்படுவது இதுவே முதல் முறையும் ஆகும். தெளிவான கருத்தை முன் வைக்கும் வகையில் இந்த உடன்பாடும் உள்ளது. கஷ்டமான காலத்திலும் நம்பகமான பங்காளித்துவ நாடுகள் ஒன்று மற்ற கன் மீது நம்பிக்கை வைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு 3 நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட நியூசிலாந்து பிரதமர் லக்சன் உடன் செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் வோங் அவரது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
உணவு, எரிபொருள், சுகாதாரம் ரசாயனம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற துறைகளில் வர்த்தகத்திற்கு இந்த உடன்பாடு பொருந்தும். அந்த துறைகளில் தேவையற்ற ஏற்றுமதித் தடைகளை இரு நாடுகளும் விதிக்க மாட்டாது.
பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்கு புதிய உடன்பாடு இருநாடுகளுக்கும் ஒரு கட்டமைப்பை அமைக்க உள்ளதாக வர்த்தக, தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விநியோக நடவடிக்கைகளுக்கு சிக்கல் ஏற்படும் போது தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், ஆலோசனை நடத்தவும் இந்த கட்டமைப்பு உதவியாக இருக்கும் என்று வர்த்தக தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.