சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் அரசு ஊழியரை தாக்கிய நபர்..!! காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூர்: 43 வயதான நபர் ஒருவர் போதையில் காவல்துறை அதிகாரிகளை வாய்மொழியாக திட்டியததற்காகவும்,தகராறு செய்ததற்காகவும், அதிகாரிகளை உதைத்ததற்காகவும் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை (மே 17) காவல்துறை இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செம்பாவாங் டிரைவில் உள்ள பிளாக் 363C இல் ஒரு குடியிருப்புப் பகுதியில் போதையில் இருந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தகராறு செய்ததாக மாலை 6:15 மணி அளவில் தங்களுக்கு அழைப்பு வந்தது என்று தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போது அந்த நபர் சில ஜன்னல்களை உடைத்து தன்னைத்தானேக் காயப்படுத்திக் கொண்டதை பார்த்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். உட்லண்ட்ஸ் காவல் அதிகாரிகள் அந்த நபரை சோதிப்பதற்காக அவர் அருகில் சென்றனர். திடீரென்று கோவமடைந்த அந்த நபர் அதிகாரிகளை வாய்மொழியாக திட்டி உள்ளார்.

அதன் பிறகு காவல்துறையினர் அவரை கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த நபர் ஒரு காவல் அதிகாரியை காலால் எட்டி உதைத்துள்ளார்.

வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியது மற்றும் அரசு ஊழியரின் கடமையை செய்யவிடாமல் தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது இன்று (மே 18) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

அந்த நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பணியில் உள்ள அரசு அதிகாரிளைத் திட்டுவதற்கும் அல்லது அவர்களிடம் வன்முறையில் ஈடுபடுவதற்கோ கூடாது எனவும், அதை சகித்துக் கொள்ள முடியாது எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த சட்டங்களை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK