சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூரில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்..!! இணையத்தில் பரவும் வீடியோ பதிவு..!!

சிங்கப்பூர்: மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஷான்-டோவா பேயோ ஜிஆர்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுவா யின் செவ் அவர்கள் மழையில் சிக்கிக் கொண்டிருந்த பொதுமக்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த வீடியோ பதிவானது இணையத்தில் பகிரப்பட்டு பல இணையவாசிகளிடம் பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று மதியம் மேற்கு கடற்கரை விரைவுச் சாலையில் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் இடதுபுறத்தில் ஒரு பெரிய லாரி நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும் அருகில் கட்டுப்பாட்டை இழந்த மற்றொரு வெள்ளை நிற செடான் காரும், அதற்கு அருகில் ந நபர்கள் ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு மழையில் சிக்கிக் கொண்டிருந்தனர்.

உடனே மழையில் நின்றவர்களுக்கு முன் தனது காரை நிறுத்தி, ஒரு தாய்க்கும் அவரது 2 குழந்தைகளுக்கும் அவர் லிப்ட் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்.

இந்த பதிவானது காரின் டேஷ் கேம் காணொளியில் பதிவாகி இருந்தது. அதை சுவா தனது Facebook பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர்கள் மூவரும் ஒரு தனியார் வாடகை காரில் பயணித்தனர். அது சற்று நீண்ட பயணமாக இருந்தாலும் இறுதியில் அவர்கள் அனைவரையும் வீட்டிற்கு கொண்டு சேர்த்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர்கள் மூவரும் தனது தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு ஆச்சரியப்பட்டுள்ளார்.

இந்த சிறிய சம்பவத்தை பகிர்வதன் மூலம் மக்கள் நற்செயல்களை செய்ய இது உதவியாக இருக்கும் என நம்புவதாக சுவா கூறியுள்ளார்.

அவர் பகிர்ந்த அந்த காணொளி ஆனது ஒரே நாளில் 17,000 முறை பார்க்கப்பட்டு சுமார் 200 முறை லைக் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நல்ல முன்மாதிரியாக திகழ்வதற்கும், மற்றவர்களுக்கு உதவ தன்னால் முடிந்ததை செய்வதற்கும் அவரை பல இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK